பதினாயிரம் பேரில் சிறந்தவர் வெண்மையும் சிவப்புமானவர் எல்லா மதுரத்திலும் சுவையானவர் அழகே உருவானவர்
என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை 1. அவர் கண்கள் புறா கண்கள் நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள் லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள் அதிலும் மேன்மையான நல்ல வாயின் வார்த்தைகள் 2. என் பிரியமே என்று அழைத்தவர் விருந்து சாலைக்குள் அழைத்து சென்றவர் என்னை சொந்தமாக்க தம்மை தந்தவர் என்னை வாழ வைக்க உடன் இருப்பவர்