நீர் மட்டும் என்னோடு இல்லாமல் - Neer Mattum Ennodu Illaamal - Lyric, Tune & Sung : Ps.Aaronbala

நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2

அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லை என்னை அரவணைக்க யாருமில்லை என்னை தேற்றிடவும் யாருமில்லை என்னை தேடிடவும் யாருமில்லை _ நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர் நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2 நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் - 2 என் இயேசுவை போல் யாருமில்லை அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை _ நீர் மட்டும் 2) என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர் நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2 என் தோல்வியின் நேரம்
நான் கலங்கின நேரம்
உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2 என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு என்னை அரவணைக்க என் நேசர் உண்டு என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு என்னை தேடிடவும் என் நேசர் உண்டு _ நீர் மட்டும்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!