என் ஆத்துமாவே கர்த்தரை - En Aathumave Kartharai - Pr. Reegan Gomez - Tamil Christian Worship Song Lyrics

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez Sung by Pr. R. Reegan Gomez Music: Pr. Joel Thomasraj Album: Aarathanai Aaruthal Geethangal 13th Vol

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம் ஒருபோதும் நீ மறந்திடாதே

1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே நடத்தி நடத்தி சுமந்து வந்தார் கண்ணின் மணிபோல காத்தருளினார் கழுகினைப்போல பறந்திடச் செய்தார் 2. உன்னதமானவர் சர்வவல்லவர் தினமும் தினமும் துணை நின்றார் பறந்து காத்திடும் பறவைபோலவே பாதுகாத்திட்டார் தமது அன்பினால் 3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார் பாடிப்பாடி மகிழ செய்தார் நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு இயேசு ராஜனை என்றும் போற்றிடு

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!