YEHOVA NISSI YEHOVAH SHALOM - யெகோவா நிசி யெகோவா ஷாலோம் - Ikkaala Eliyave Ezhumbu

Album :  Ikkaala Eliyave Ezhumbu
Lyrics By : Bro. J. Sam Jebadurai
Tamil Christian Songs Lyrics

யெகோவா நிசி யெகோவா ஷாலோம்
யுத்தத்தில் ஜெயக்கொடியானவர்     
உலகம் மாமிசம் பிசாசு யாவையும்     
ஜெயித்தாரே கல்வாரியில்  

ஜெய ஜெய வேந்தனாய் சேனை அதிபதியாய்
எந்தன் நேசர் இயேசு வந்திடுவார்
அல்லேலூயா ஓசன்னா யூத ராஜ சிங்கமே
துதி கன மகிமை என்றென்றும் (அல்லேலூயா)

சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே
சாத்தானின் சதி அழித்திடவே
சிங்கம் மேல் நடந்து சர்ப்பங்கள் அழிக்கும்
அதிகாரம் தந்திட்டாரே    - ஜெய ஜெய

சோதனை போராட்டம் வந்தாலும்     
சோர்ந்து போகா நேசர் உண்டல்லவோ
வழக்காடிடுவார் யுத்தம் செய்திடுவார்     
வெற்றிமேல் நான் வெற்றி பெறுவேன்  - ஜெய ஜெய

ஜெயங்கொண்ட தேவகுமாரன்
விண்ணொளி வீசும் (பரலோகத்தில்) பிதா அருகில்
சிங்காசனம் மீது வீற்றிருக்கவே
அழைக்கிறார் சத்தம் கேளாயோ?   - ஜெய ஜெய

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!