Pas. D. Bennet Christopher
Reconciling Ministries India
Tamil Christian Worship Song Lyrics
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும் நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது இயேசு நாமம் எனக்கு போதும் 5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே