ஸ்தோத்திரம் இயேசு நாதா - உமக்கென்றும் ஸ்தோத்திரம் -
இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் - திரு
நாமத்தில் ஆதரவில்
1. வான தூத சேனைகள் - மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு - ஸ்தோ
2. இத்தனை மகத்வமுள்ள - பதவி இப்புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின்கிருபை
எத்தனை ஆச்சாpயம் - ஸ்தோ
3. நின் உதிரமதினால் - திறந்த நின் ஜீவ புது வழியாய்
நின்னடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் - ஸ்தோ
4. இன்றைத் தினமிதிலும் ஒருமித்துக் கூட நின் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - ஸ்தோ
5. நீரல்லால் எங்களுக்கு - பு+லோகத்தில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி பரத்தில் வேறே ஒரு
தேட்டமில்லைப் பரனே