sthotharipen sthotharipen yesu devanai lyrics - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு

sthotharipen sthotharipen yesu devanai lyrics

tpm songs tamil lyrics

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை 

 என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 

 

1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை 

இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் - ஸ்தோ 

 

2. பாவக் கறை நீங்க என்;னை முற்றிலுமாக – உம் 

சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே  - ஸ்தோ 

 

3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே 

என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ 

 

4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் 

தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் -ஸ்தோ 

 

5. நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளைக் 

கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்  - ஸ்தோ 

 

6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை – அதி 

சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - ஸ்தோ 

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!