நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் - Ninaivellam ekkamellam Lyrics - PS. Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே

உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே

மழைக்காக காத்திருக்கும்
பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே
என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே

தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே
மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!