இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம் பண்ணும் பரிசுத்தரே
உம்மை வாயார வாழ்த்துகிறேன்
உம்மை மனதார போற்றுகிறேன்
ஆ.அல்லேலூயா (4)
1.ஸ்தோத்திர பலியிடுவேன்
செய்த நன்மை நினைக்கின்றேன்
நன்றி சொல்லிடுவேன் மகிமைப்படுத்திடுவேன்
மகிமை உமக்கு மகிமை -2 - ஆ ..அல்லேலூயா (4)
2. தகப்பன் கைவிட்டாலும்
நீர் என்னை சேர்த்துக்கொண்டீர்
பெற்ற தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை அணைத்துக்கொண்டீர்
தாயே என் தந்தையே -2 ஆ ..அல்லேலூயா (4)
3. வானம் பூமி படைத்தவரே
நீர் சர்வ வல்லவரே
ஜீவனுள்ள தேவன் நீரே ஜீவாதிபதி நீரே
ஜீவனே என் பெலனே -2 ஆ..அல்லேலூயா (4)