என் இதய தெய்வமே என்னில் - En Idhaya Deivamae Ennil - Tamil Christian Song

என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - (2) உன் உறவை எண்ணியே என் உள்ளம் ஏங்குதே  உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா  அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்  அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்  ஆனால் ஏசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - (2) என் இனிய அன்பே எழுந்து வா  வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு  தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு  ஆனால் ஏசுவே நல் நண்பன் நீயன்றோ  - (2) என் இனிய நண்பா எழுந்து வா


*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!