ஆளுகை செய்யும் அவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே -என் ஆற்றலானவரே
நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்
அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே
புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
கிறிஸ்துவின் அன்பின் ஆழம்
அகலம் உயரம் உணரணுமே
நினைப்பதற்க்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே