அபிஷேகம் இருந்தால் போதுமே –அது
அனைத்தையும் உன் வாழ்வில் செய்யுமே
அபிஷேகம் இருந்தால் போதுமே –அது
நுகங்களை எல்லாம் முறிக்குமே -இயேசுவின்
1.படிப்பும் பட்டமும் தேவையில்லை
பாரினில் உன்னை உயர்த்திடவே
பாசமிகுந்த நல் இயேசு ராஜனின்
அபிஷேகம் இருந்தால் போதுமே
2.பெரிய மனிதர்களும் தேவைஇல்லை –நீ
பெரிய காரியம் செய்திடவே
பெரிய தேவனின் மகிமை நிறைந்த நல்
அபிஷேகம் இருந்தால் போதுமே
3.எத்தனை கட்டுகள் வாழ்க்கையிலே -நீ
எதிலும் கலங்க தேவையில்லை
அத்தனையும் இன்று உடைந்திடுமே
தேவ அபிஷேகத்தால் அவை முறித்திடுமே