இயேசு ஜெயித்தார்! - Jesus Has Won :: தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message

இயேசு ஜெயித்தார்!

தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes
sermons about victory in tamil, 

ஒரு பூமி அவர்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் பொழுது அது அவர்களுக்கு சொந்தமாக மாறிவிடும்.

அதில் ஞானமான சொந்தக்காரன் இருப்பானானால் அது அவனுக்கு திரும்ப சேர்ந்து விடும் கர்த்தருக்குஸ்தோத்திரம் பிசாசானவன் என்ன செய்கிறான் என்று சொன்னால் நம் மேல் உரிமை பாராட்டிக்கொண்டேஇருக்கிறான்.

நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறான் அடுத்த வசனத்திலே திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறே ஒன்றுக்கும் வரான்.

1) நல்ல மேய்ப்பன்

2 )திருடுகின்ற திருடன்

 இந்த 2 பேரையும் சரியாக அறிந்திருக்க வேண்டும் இயேசுவுக்கு ஒரே ஆசை இரட்சிப்பை தர வேண்டும். பரலோக ராஜ்யத்தை தர வேண்டும் மகிமையான புது எருசலேமை தர வேண்டும்.

எவ்வளவோ ஆயத்தம் பன்னி வைத்திருக்கிறார். கணக்கே கிடையாது ஆயத்தம் பன்னி வைத்திருக்கின்ற வீடு சாதாரணமான வீடு அல்ல ஓலை விலையேற பெற்ற அஸ்திபாரம் போட்ட வீடு மாதந்தோறும் கனிதரும்அந்த செடியுடைய அந்த மரத்தினுடைய கனியை நமக்கு புசிப்பதற்க்கு ஆண்டவர் ஒரு பாக்கியம் தந்திருக்கிறார்.

 Pepsi-அல்ல 7Up-அல்ல Coco Cola-அல்ல ஜீவத்தண்ணீர் நதியிலிருந்து நாம் பானம் பன்ன போகிறோம்.

மாதந்தோறும் புதிய கனி என்று சொன்னால் இன்றைக்கு விளங்காது கர்த்தருடைய வருகை பிந்துமானால் கடையிலே போய் நீங்கள் ஆப்பிள் வாங்கவேண்டும் என்று கேட்டால் கடக்காரன் உங்களிடத்தில் என்ன டேஸ்டிலே ஆப்பிள் வேண்டும் என்று உங்களை கேட்பான். ஆப்பிளுடைய நிறத்தையும் சுவையையும் மாற்ற கூடிய முறைகளை கண்டுபிடித்து விட்டார்கள். ஒரு குறைவில்லாத ஒரு சலிப்பில்லாத ஒரு வாழ்க்கை.

ஆண்டவர் இதற்க்கு நேராக ஆப்போஸிட்டாக பொல்லாத திருடன் பெயல்செபுல் சாத்தான் பழைய பாம்பு ஒரு நாளும் நிறையாத மனுஷன் அவனுடைய வாய் தா தா என்று தான் கேட்டுக்கொண்டிருக்கும்.

பிசாசுவுடைய நடுவிலே வளர்ந்தவன் இதை கொண்டா அதை கொண்டா பொருளைக்கேட்கும். 

ஒரு சமயம் ஒரு கர்ப்பிணிக்கு பிள்ளை பிறக்கவே இல்லை நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.

திடீரென்று அந்த கர்ப்பிணியுடைய தாயுக்கும் அக்காளுக்கும் பிசாசு வந்து அடி செல்லியது நீ எனக்கு சேலை தந்து எத்தனை நாள் ஆச்சி அந்த தாயார் என்ன செய்தார்கள் சேலையிலே அந்த காலத்திலே ஒரு பண துட்டு இருந்தது அந்த ஒரு பணத்துட்டை முடிந்து பிள்ளை பிறக்கட்டும் உனக்கு வேண்டியது எல்லாம் தருகிறேன். என்று சொன்னதும் பிள்ளை பிறந்தது.

 அந்த பிசாசு கேட்டது என்னுடைய தாத்தா இடத்திலே ஒரு உயிர் வேண்டும் அவர் கேட்டார். உனக்கு யாருடைய உயிர் வேண்டும் உன்னுடைய மருமகளுடைய உயிர் வேண்டும்.

 என்னுடைய தாத்தா அவனிடத்திலே சொன்னார் மருமகளுடைய உயிரை தர முடியாது பிசாசே வேண்டுமானால் என் மனைவியை எடுத்துக்கொள். மூன்று நாள் இரத்த வாந்தி மூன்றாவது நாள் மரித்துவிட்டார்கள்.

 வயிற்றில் பிள்ளை இருக்கும் பொழுதே சொல்லி விட்டு அந்த குழந்தை சாகப்போகிறது என்று சொன்னது அந்து பிள்ளை எனக்கு வேண்டும் வயிற்றில் இருக்கின்ற பிள்ளை சுகமாக பிறக்கவில்லை

 முதல் பிரசவம் நேராக சொல்லி நான் அவளை எடுக்க போகிறேன் எனக்கு வேண்டும் ஒருவராலும் தடுக்க முடியவில்லை. இயேசுவை பற்றி எங்க அம்மாவிற்க்கு கொஞ்சம் அறிவுண்டு ஆனால் இயேசு விடுவிக்கிறார். என்று எங்களுக்கு தெரியாது கடைசியிலே அவரிடத்தில் வந்து அடைக்கலம் புகுந்த பொழுது தான் நாங்கள் காப்பாற்ற பட்டோம் இந்த உலகத்திலே 2 சத்துவங்கள் இயேசு கொடுக்கிறவர்.

 அவர் ஜெயிக்கின்ற தேவன் பொல்லாத பிசாசை நம்புகிற மனுஷர்களை குறித்து நான் மிகவும் துக்கப்படுகிறேன் பன்றியை கொடுத்தோம் ஆட்டை கொடுத்தோம் மாட்டை கொடுத்தோம் கோழியை கொடுத்தோம் கேட்டதை எலலாம் கொடுத்தோம் கடைசியாக ஆட்களை கேட்க ஆரம்பித்தது.

அதற்க்கு ஒரே நிர்பந்தம் என்னுடைய அம்மாவை தான் வேண்டும் என்று ஒரே பிடியாய் பிடித்தது அம்மாவுக்கு தாங்காத வியாதி என்னுடைய தகப்பனார் மந்திரவாதி

அம்மாவை நடுவிலே ஒரு நாற்காளியில் உட்காரவைத்து அம்மாவுடைய முடியை எடுத்து 8 ஒரு 10 பின்னலாக பின்னி அந்த முடியோடு சேர்த்து ஒவ்வொரு இடத்திலே அவ்விதமாக சுற்றி தென்னை கீற்றிலே ஒரு சீட்டு செய்வார்கள் அந்த சீட்டுகளை சுற்றி வைத்து அந்த சீட்டுகளை சுற்றி மந்திரவாதி அந்த சீட்டுகளுக்கெல்லாம் ஒரு பிசாசு அந்த சீட்டோட என்னுடைய தாயாருடைய முடியை சேர்த்து கட்டிவிட்டார்கள் இராத்திரி முழுவதும் மந்திரம் நடந்தது .

ஒருவர் சொல்லி கொடுத்தார் இந்த வீட்டை இடித்து தரை மட்டமாக்கி எங்கேயாவது ஓடினால் நீங்கள் பிழைக்கலாம் அந்த வீட்டை இடித்து தரை மட்டமாக்கி 32 நாட்களில் வேறே வீட்டை கட்டி அந்த வீட்டில் போய் குடியேறினோம்.

திருடனை வீட்டிலே ஏற்றவே கூடாது நாள் பார்க்க போகாதே பிசாசுக்கு வீட்டிலே இடமே கொடுக்காதே அவன் திருடன் அவன் எப் பொழுதும் நம்மை வஞ்சிக்கிற பொல்லாதவன் அநேகருடைய வாழ்க்கையிலே பிசாசின் மேலே கர்த்தர் ஜெயம் எடுத்திருக்கிறார்.

நீங்கள் இடம் கொடுக்க கொடுக்க ஆண்டவர் ஜெயம் எடுத்துகொண்டே இருப்பார் சாத்தான் என்னுடைய சரிரத்திலே என்னுடைய ஆத்தூமாவிலே என்னுடைய குடும்பத்திலே என்னுடைய வீட்டிலே இடமே கிடையாது.கர்த்தரை எப்பொழுதும் கனம் பன்னுங்கள் கர்த்தரை எப்பொழுதும் துதியுங்கள் உங்களுடைய வாழ்க்கையிலே ஒரு அற்புதம் நடக்கும்.

 இந்த சாத்தானை ஆண்டவர் அடித்து தாழ்த்தினாலும் அவன் முற்றிலுமாய் அழிக்க படுவதே இல்லை அவனுக்கு சப்போர்ட் பன்ன இந்த உலகத்திலே கொஞ்சம் பேர் இருப்பார்கள்.

ஆண்டவர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அவருக்கு பசி உண்டான நேரத்திலே சாத்தான் பக்கத்திலே வந்து நின்றான். இந்த கல்லுகளை அப்பங்களாக மாற்றி சாப்பிடு என்று சொன்னான் ஆண்டவர் சொன்னார் மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் அந்த டாப்பிக்கை விட்டு விட்டான்.

 பிறகு உப்பரிகை மேல் நிறுத்தி மேலிருந்து தாழ குதியும் தேவ தூதர்கள் உன்னை காப்பார்கள் என்று 91 ம் சங்கீதத்திலே எழுதியிருக்கிறது எல்லாரும் உன்னை பார்த்து பிரமிப்பார்கள். திரும்ப கொண்டு உயர்ந்த மலையின் மேல் நிறுத்தி இந்த உலகத்தை எல்லாம் காட்டினான்.

என் பாதத்தில் விழுந்து நீ பணிந்தால் இதை எல்லாம் உனக்கு நான் இதை தருவேன் பிசாசை கும்பிடுகிறவன் பணத்தை கொடுப்பான் ஆத்தூமாவை அவன் எடுத்து கொண்டு போய்விடுவான் மனுஷ ஆத்தூமா தான் பிசாசுக்கு சாப்பாடு அப்பாலே போ சாத்தானே பின் கர்த்தர் சொன்னார். இந்த உலகம் பொல்லாங்கினுடைய கைளிலே விடப்பட்டிருக்கிறது.

ஆதாமும் ஏவாளுமாய் இந்த அழகான உலகத்தை ஒற்றி வைத்தார்கள் அவன் இதை அனுபவித்து கொண்டே இருக்கிறான். இந்த உலகத்தை சிலர் நம்பி சார்ந்து இந்த உலகத்திற்க்குள் புகுந்து விளையாடினால் என்ன செய்வான் எலி பொரியிலே அகப்பட்ட எலியை போல நாம் அவனுடைய பொரிக்குள்ளே அவன் அகப்பட வைத்திடுவான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனை ஜெயித்தார்.

கல்வாரி சிலுவையிலே ஏறி அவனுடைய தலையை நசுக்கினார் ஆனாலும் வாலை கொண்டு பரிசுத்தவான்களை தள்ளிவிட்டு கொண்டே இருக்கிறான் தேவனுடைய பிள்ளைகளின் பக்கத்திலே அவன் வருவான் வந்து உலகத்தை காட்டுவான். பார் அழகை பார் பார் பார் சிங்காரத்தை பார் என்று வருவான் அப்பாலே போ சாத்தானே உனக்கு என் மேல் அதிகாரம் கிடையாது நீ சபிக்க பட்டவன் என்று துரத்தி விட்டோமானால் ஓடிபோவான்.

பரவாயில்லை நன்றாயிருக்கு என்று ஒற்றை கண்னை அடைத்து விட்டால் நம்மை ஆட்கொண்டு விடுவான் பிறகு தப்பித்து கொள்ள முடியாது. ஆட் கொள்ளும் பொழுது அவருடைய இரும்பு சங்கிலியை போட்டு அவன் நம்மை கட்டி விடுவான் இதை எல்லாம் அறிந்த ஆண்டவர் என்ன செய்தார். சிலுவையிலே அவனுடைய தலையை நசுக்கினார். பாதாளத்திலே அவரை அவன் கொண்டு போனான் அவன் நினைத்தான் பரவாயில்லை இவரை பிடித்து விட்டோம்.

 2 பாதாளம் இருக்கிறது பாதாளத்திற்க்கும் இரண்டிற்க்கும் இடையிலே ஒரு பிளப்பு 1 தாழ்ந்த பாதாளம் 1 உயர்ந்த பாதாளம் இந்த உயர்ந்த பாதாளத்திற்க்கு ஆபிரகாம் மடி என்று பெயர் தாழ்ந்த பாதாளம் அது பிசாசினுடைய கோட்டை ஐசுவரியவான் தாழ்ந்த பாதாளத்தில் கிடந்தான் லாசரு உயர்ந்த பாதாளத்தில் இருந்தான்.

 சாத்தான் நினைத்தான் கதை முடிந்து போனது இனி நமக்கு விருப்பம் போல விளையாடலாம். வெள்ளிக்கிழமை அவரை கொண்டு போனான் சனிக்கிழமை ஓய்வு நாள் ஓய்வு நாளில் அவர் ஓய்ந்திருந்தார்.

ஓய்வு நாள் முடிந்து முதல் வாரத்திலே முதல் நாள் ஆரம்பிக்கின்ற நேரத்திலே பாதாளத்திலே ஒரு பயங்கரமான அதிர்ச்சி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் ஆண்டவர் பாதாளத்தையும் தூக்கிக்கொண்டு பரதீசிக்கு வந்து விட்டார் சாத்தானை ஆண்டவர் ஜெயித்தார். மரணத்தை ஆண்டவர் ஜெயித்தார். பாதாளத்தை ஆண்டவர் ஜெயித்தார் வேதாளத்தை ஆண்டவர் ஜெயித்தார்.

அது தான் ஈஸ்டர் பண்டிகை அவரோடு நான் சேர்ந்து நிர்க்கிறதிலே நானும் ஜெயித்தவன் தான் அவரை விட்டு விலகி விட்டேனானால் என்னால் ஜெயிக்கவே முடியாது மாம்ச பலத்தினாலே ஒருவரும் ஜெயிக்க முடியாது ஜெயமோ கர்த்தரால் வரும் ஒரு மனுஷனாலும் ஜெயம் வராது.

இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார்.

 ”அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.(லூக்.24.5:6)

முஸ்லீம்கள் மக்காவிலே போய் அவர்களுடைய நபியுடைய கல்லறையை பார்த்துவிட்டு வந்தார்கள் தேவனுடைய பிள்ளைகள் பாலஸ்தீன தேசத்தில் போய் தேடிப் பார்த்தார்களானால் அங்கு பத்திரமாய் இருக்கின்ற ஒரு கல்லறையை காணலாம்

தேவ தூதன் சொன்ன வார்த்தை அவர் இங்கே இல்லை உயிரோடு இருக்கிறவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள். ”பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.(1கொரி.15.26) மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.(1கொரி.15.55;56)

 மரணம் தன்னுடைய கோரமான பற்க்களை காட்டி மனுஷனை பயப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆபத்து என்று சொல்லுகின்ற இடத்திலே ஒரு மண்டை ஓட்டை வைத்திருப்பார்கள். கண் இருக்கின்ற குழி தான் இருக்கும் அந்த மண்டை ஓட்டின் கீழ் 2 கை எலும்பை வைத்திருப்பார்கள். ஆனால் மரணமாகிய சத்துருவை இயேசு ஜெயித்தார் தேவ பிள்ளைகள் மரிக்க மாட்டோமா மரிப்போம் சிலர் மரிக்காமல் இருப்பார்கள். மரித்தாலும் மரிக்காமல் இருந்தாலும் நாம் அழிந்து போவதில்லை மரணத்திற்க்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறது. நித்திரை ஏனென்றால் ஒரு நாளில் விழித்து எழும்பி ஆண்டவரை பார்க்க போகிறோம்.

அழகான நாள் என்ன இன்பமான நாள் அம்மா நீங்கள் முன்னே போங்கள் நாங்கள் எல்லாம் பின்னாலே வருவோம்.

எனக்கு நல்ல நிச்சயம் இருக்கிறது ஜிம்ரீவிஸ்விற்கு ஒரு பாட்டை ஞாபகப் படுத்தினேன். அம்மாவை ரொம்ப நேசித்தான் கல்யாணம் ஆனாதோ ஆகளையோ தெரியாது ரொம்ப காலம் சினிமா பாடல் ஆங்கில பாடல்களில் பெரிய பாடகன் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆண்ட வருடைய பிள்ளையாக மாறிவிட்டான்.

அவனுக்கு எப்போ பார்த்தாலும் அம்மாவுடைய நினைவு அம்மா போய்விட்டார்கள். அங்கே காத்துக் கொண்டு இருக்கிறார்கள் பரலோகத்திலிருந்து என்னனை கூப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள். நான் போவேன் அம்மாவை பார்ப்பேன் அவனும் வாலிப நாட்களில் இறந்து போனான்.

நித்திய இளைபாறுதலுக்குள்ளே பிரவேசிக்க போகிறோம். இந்த கோர பல்லுள்ள மரணத்தின் பல்லை இயேசு பிடிங்கினார்.

 இயேசு மரித்து அடக்கம் பன்ன பட்டு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் இப்பொழுது பாதாளம் மரணம் பின்னாடியிருந்து திகைக்கிறது. என்னுடைய பிடியிலிருந்து ஒருவன் ஓடி வந்து விட்டான்.அவரை நம்பின அத்தனை பேரும் இந்த பாதாளத்தையும் மரணத்தையும் ஜெயிக்கிறார்கள்.

ஒரு தேவனுடைய மனுஷன் நீண்ட காலம் இயேசுவுக்காக சிறைச்சாலையில் அவதிபட்டவர் ஜெபம் செய்தாராம் ஆண்டவரே அப்பா உம்முடைய சந்நிதானத்திலே நான் வருவேன் வரும் பொழுது உம்மை பார்ப்பேன் பவுல் பேதுரு யோவான் யாக்கோபு பரிசுத்தவான்களை பார்ப்பேன் எல்லாரும் வெண்ணங்கி தரித்து அழகாக இருப்பார்கள்.

எனக்காக மாத்திரம் சிறைச்சாலை வஸ்திரம் வைத்துக்கொள்ளுங்கப்பா மூடி பிரசங்கியார் சாகுகிறார். மனைவியை பார்த்து சொன்னார்.My wife you are a good wife அழ போகும் பொழுது திரும்பவும் ஒரு ஞாபகம் வந்தது.

 It is not my death day it is my carination day என்னுடைய மரண நாட்கள் அல்ல மகுடபிஷேக நாள் மூடிக்கு முன்னாலே ஒரு பராக்கிரமசாலி போனார் இயேசு மரணத்தை வெட்டி வீழ்த்திவிட்டு போய்விட்டார் நாம் பயந்து ஓட மாட்டோம் சந்தோஷமாய் வரவேற்போம் மரணமே வா காரில் பின்னாடி பெரிய இடத்திலே கிறிஸ்து எனக்கு ஜீவன் என்று எழுதி வைத்திருந்தேன்.

கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் தெய்வ மக்களை சாவு ஒன்றுமே செய்ய முடியாது பரிசுத்த பவுல் அவனுடைய தலை வெட்டப்பட வேண்டும் பவுல் என்ன சொன்னார் இப்பொழுதே நீதியின் கிரிடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதி பதியாய் இயேசு தாமே என் தலையில் அதை சூட்டபோகிறார் என்ன தைரியம்.

ஆண்டவரே பாஸ்டர் பிரசங்கம் தான் எங்களுக்கு பிடிக்கும் அதினாலே ஆயுசு நாட்களை கொடுக்க வேண்டும் என்று தயவு செய்து கேட்கவே கூடாது.உமக்கு சித்தமானால் இன்றைக்கே எடுத்துக் கொள்ளும் என்று ஸ்தோத்திர பாட்டு பாடவேண்டும்.

இயேசு கிறிஸ்து மாத்திரம் சாவின் மேலே ஜெயித்தார். அதே போலே “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபி.2.15) மனுஷனுக்குள்ளே மரண பயம் அவனை விடுதலையாக்கும்படியாய் இயேசு அப்படியானார் ஒரு நாள் கூட உயிரேபாடு வாழ முடியுமானால் அதற்க்காக கோடி ரூபாய் செலவழிப்பார்கள்.

 பயப்படாதே மகளே மரண இருளின் பள்ளதாக்கிலே கர்த்தர் கூட இருக்கிறார். நான் மரண இருளின் பள்ளதாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.

பரிசுத்தவான்கள் மரணத்திற்க்கு பயப் படவே இல்லை.

மரணத்தை மாத்திரம் அல்ல அதற்க்கு அதிகாரியான பிசாசுவை ஜெயித்து விட்டார் ஆண்டவர் உலகத்தையும் ஜெயித்தார். ”என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.(யோவான்.16:33)

 திடன் கொள்ளுங்கள் தமிழில் வார்த்தை என்ன தைரியப்படுங்கள் ஆங்கிலத்தில் எப்படி இருக்கு சந்தோஷமாக இரு உலகத்தில் உபத்திரவம் உண்டு நீ சந்தோஷமாக இரு.

சிம்சோன் வாழ்க்கையிலே தவறு வந்தது அவனுடைய கண் பிடுங்கப்பட்டு போயிற்று எல்லாரும் நினைத்தார்கள் ஏ சிம்சோன் கண்ணை பிடிங்கிட்டோம் தலை முடியை வெட்டி விட்டோம் இனி உன்னாலே ஒரு தொல்லையும் இல்லை இவனை விளையாட்டு காட்டுவோம்.

திடிரென்று மண்டபம் இடிந்து விழுந்து மூவாயிரம் செத்தார்கள் அவனுக்குள்ளே வல்லமை வந்தது.

 காசு இருக்கிறது என்று உலகத்தையே அசைத்திடலாம் என்று ஒருவரும் நினைக்க கூடாது.

நம்மை பகைக்கும் உலகம் நம்மை அற்பமாய் சொல்லும் இவன் தானே உ என்று ஊதிவிட்டால் பறந்து விடுவான்.உபத்திரவம் உண்டு அப்பொழுது சந்தோஷப்பட வேண்டும்.

உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும் இயேசுவை பற்றிக்கொண்டு பிடித்து கொண்டு போ வேனானால் நானும் உலகத்தை ஜெயிக்க முடியும்.

 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.(யோவான்.14.30)

 வர வர என்னுடைய இதயத்திலே இந்த உலகத்தை பற்றி அசாதரணமான ஒரு வெறுப்பை தந்திருக்கிறது லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் போதும் எனக்கு இயேசு

மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டு விடுவேனோ எவ்வளவு தான் கட்டிபிடித்து வைத்தாலும் நம்மை விட்டு போய் விடும் நீ எத்தனை மாடி மனை கட்டினாலும் எத்தனை ஏக்கர் வைத்திருந்தாலும் எத்தனை கோடியை கொண்டு பேங்கிலே போட்டாலும் போகின்ற சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு போகாமல் வழியே கிடையாது.

 இன்றைக்கு தேதி 4. 14ம் தேதி க்ளோஸ் 10 ஆயிரம் செலவழியுமோ செலவழி அதே போல இன்னொருவனிடத்தில் போய் நீ 14ம் தேதி சாகப் போகிறாய் உனக்கு 10000 ரூபாய் தந்திருக்கிறேன். எப்படி செலவழிக்க வேண்டுமோ செலவழி நல்லவன் அந்த 10000 ரூபாயும் வேண்டாம். ஆண்டவரே என்று சொல்லி 10 நாளும் நான் ஜெபம் செய்ய போகிறேன். பரிசுத்தமாய் கொண்டிருக்கபோகிறேன்.

மற்றவன் என்ன செய்வான் 10 ஆயிரம் ரூபாயும் கொண்டு குடித்து வெறித்து ஜாலியாக இன்னும் பத்து நாட்கள் தாண்டா மரித்து அழிந்து நாசமாய் போவான் சாத்தானுக்கு தெரியும் ஆண்டவர் வருகின்ற நாள் அவனுக்கு ஆபத்தான நாள் அதினாலே அந்த நாளுக்குள்ளே எத்தனை பெயரை தீர்க்க வேண்டும்.

கர்த்தர் வருவார் வரும் பொழுது அவரை பற்றி பிடிக்கின்ற ஒரு கூட்டம் இருக்கிறது அந்த கூட்டத்திற்க்கு என்ன பெயர் மணவாட்டி கூட்டம் அதை எடுத்து கொண்டு போய்விடுவார்.

 சாத்தானுக்கு 7 வருஷம் செய்ய வேண்டிய அக்கிரமத்தை அத்தனையும் செய்வான் ஆண்டவர் திடிரென்று மறுபடியும் வந்து இந்த சாத்தானை பிடித்து அந்தகார சங்கிலி களினாலே கட்டி வைப்பார்.

ஆயிரம் வருஷம். பாவிக்கும் சந்தோஷம் . பரிசுத்தவான்களுக்கும் சந்தோஷம். காரணம் இந்த உலகத்திலே யார் இல்லை சாத்தான் இல்லை பாவம் இல்லை கள்ள கணக்கு எழுதுகிறவன் இல்லை ஆயிர வருஷ முடிவிலே சாத்தானை அவிழ்த்து விட்டு விடுவார் போ பிசாசே செய்கிறது செய்து விட்டாய்.

சாத்தானை அவிழ்த்து விட்டதும் இந்த சாத்தான் குஞ்சுகள் எல்லாம் என்ன செய்கிறது நான் ஆயிரம் வருஷம் நான் சுகமாய் இருந்தேன்இவ்வளவு நாள் சமாதானமாய் வாழ்ந்த பிறகு கூட இயேசுவை ஏற்றுக் கொள்ளாத அத்தனை பேரும் யார் கூட சாத்தான் கூட எவ்வளவு பேர் தெரியுமா?

கடற்க்கறை மணலத்தனையான ஜனங்கள் சாத்தானோடு சேர்ந்து கொண்டார்கள்.

ஆயிரம் வருஷம் ஆண்டவருடைய அழகிய வாழ்க்ககை வாழ்ந்து மனம் திரும்பாதவன் சாத்தானை கண்டு பின்னாலே போவான்.

இயேசு வரும் பொழுது அவருடைய பக்கத்திலே ஒரு கூட்டம் கூடுகிறது (வெளி 17 .14 லே ஒரு கூட்டம் கூடி கொண்டே இருக்கிறது அது யார் அழைக்க பட்டவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் உண்மையுள்ளவர்கள். தேவன் அழைத்த மக்கள் தேவன் உங்களை அழைத்தார் மனுஷனுடைய பார்வையில் அற்பமாய் தோன்றலாம் ஆனால் தேவனுடைய பார்வைக்கு விலையேற பெற்ற முத்துக்கள் போராடுகின்ற போர் வீரர்கள் அந்த மக்கள் ஆண்டவருடைய மணவாட்டி கூட்டம் இயேசு முன்னாலே வெள்ளைக்குதிரையில் ஏறிபோவார் வாயின்பட்டயத்தை எல்லாவற்றையும் தீர்த்து விடுவார் சாத்தானை தோற்க்கடிக்க பன்னுவார் .அவன் அடியற்ற பாதாளத்திலே தள்ளப்பட்டு போவான்.

அதன் பிறகு வெளியே வருவதும் இல்லை யுத்தம் செய்கிறதும் இல்லை ராஜ்யத்தை ஆண்டவர் பிதாவினுடைய கைகளை ஒப்புக்கொடுப்பார் பிதாவே இது உம்முடைய ராஜயம் பரிசுத்தபடுத்தி விட்டேன் பாவங்களை மன்னித்து விட்டேன் கரைகளை நீக்கி விட்டேன் என்னுடைய மணவாட்டி கூட்டம் என்னோடு கூட இருக்கிறது.

நித்தியத்திற்க்குள்ளே சந்தோஷமாய் பிரவேசித்து விடுவோம் யுக யுகமாய் வாழபோகிறோம். 100 வயதும் இல்லை 1000 வயதும் இல்லை யுகங்கள் கடந்து போகும் ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் ஆண்டவரை துதிப்போம் அந்த அழகான கனி மரத்தை புசிப்போம் அந்த தண்ணீரை பானம் பன்னுவோம் ஆண்டவரை துதித்து மகிழ்ச்சியாய் இருப்போம் சாத்தானின் கூட்டத்தை கண்களால் காணமுடியாது .

 நித்திய மகிமை பரம சீயோன் புதிய எருசலேம் அழகான ஒரு வாழ்க்கை பெரிய ஜெயத்தை நமக்காக செய்தவர் கிறிஸ்து நமக்காகவே இந்த ஜெயத்தை பெற்றிருக்கிறார்

ஜெயம் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வான் ஜெயமோ கர்த்தரால் வரும் இயேசுவின் பின்னாலே நாம் போக துணிகின்ற நேரத்திலேஜெயம் செய்ய போகிறோம்.

ஜெபம்.

மரணத்தை ஜெயித்த இயேசு முன்னே போகிறார் சகலத்தையும் ஜெயித்த ஜெய வீரன் அவர் முன்னே போகிறார் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினாலே ஜெயம் கொடுக்கின்ற தேவனாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!