அசையாத ராஜ்யம்! : பாஸ்டர் என். தாமஸ் - தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

அசையாத ராஜ்யம்!
பாஸ்டர் என். தாமஸ்

தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

“ஆதலால் அசைவில்லாத ராஜ்யத்தை பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையை பெற்றுக் கொள்ளக்கடவோம்” (எயபி.12:28). ஆதலால் என்று சொல்லுகிற வார்த்தை 26-ம் வசனத்தை சேர்க்கிற ஒரு வார்த்தை. ”அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று. இன்னும் ஒரு தரம் நான் பூமியை மாத்திரம் அல்ல. வானத்தை அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.”

 ”கர்த்தர் சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால் அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது. அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது” (யாத். 19:18). ”ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள். அதைக் கண்டு ஜனகள் பின்வாங்கி தூரத்திலே நின்று” (யாத். 20:18). “சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் கொஞ்சகாலத்துக்குள்ளெ இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்“ (ஆகாய். 2:6).

 “நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால் நான் வானத்தையும் பூமியையும் அசையப்பன்னி, ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன். குதிரைகளோடே அவைகளின் மேல் ஏறியருப்பர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்“(ஆகாய். 2:21;22;23).

 ஆண்டவர் தேசத்தை அழிப்பேன் என்று சொல்லுகிறார். அதே சமயத்திலே செருபாபேலினிடத்தில் சொல்லுகிறார், உன்னை நான் முத்திரை மோதிரமாக வைப்பேன். உன்னை நான் சேர்த்துக்கொள்வேன். “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம் பூதங்கள் வெந்து உருகிப்போம். பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப்போம்“(2பேதுரு. 3:10;12).

 ஆபத்தான சம்பவங்கள் இந்த உலகத்தில் வரவேண்டியது. எபி. 12:28--ல் ஆதலால் அசைவில்லாத ராஜ்யத்தை பெறுகிறவர்களாகிய நீங்கள்... இரண்டு விதமான ராஜ்யங்கள். ஒரு ராஜ்யம் அசைகிற ராஜ்யம். இன்னொன்று அசைவில்லாத ராஜ்யம். இந்த உலகத்திலே இரண்டு மூன்று காரியங்களுக்கு ராஜ்யம் என்று சொல்லுகிற வார்த்தையைக் கொடுக்கலாம். ஒன்று எழுத்தின்படியான ராஜ்யம். இந்திய ராஜ்யம், பிரிடிஷ் ராஜ்யம் சாம்ராஜ்யங்கள். இன்னொன்று என்ன என்றால், பெரிய தொழில்களை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.

 ஒரு மனிதன் சாதாரணமான மனிதனாக இருந்தான் அவன் சின்ன கடையை ஆரம்பித்தான். அந்தக் கடையை ஆரம்பித்து கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். சின்ன கிளை ஒன்றை ஆரம்பித்தான். இப்பொழுது அவனுக்கு 1600 கிளைகள் அமெரிக்க தேசத்தில் மட்டும் இருக்கிறதாம். ஒரு இடத்தில் ஒரு திருட்டு நடந்த பொழுது அந்த திருட்டை கண்டுபிடிக்க தீர்மாணித்து அதற்காக பிரயாசப்பட்டான்.

 திடீர் என்று திருடினவன் அவனை அந்த இடத்திலேயே குத்தி கொலை செய்து போட்டான். ஒரு விதவை அவளுக்கு இரண்டு, மூன்று பிள்ளைகள் உண்டு. திடீர் என்று அவளுடைய கையில் ஒரு கவர் வந்து சேர்ந்தது. அந்த கவரில் 20ஆயிரம் டாலர். நான்கு லட்சம் ரூபாய் இருக்கலாம். நீ உயிரோடிருக்கும் காலமெல்லாம் உனக்கு இந்த தொகை வந்து சேரும் என்று எழுதியிருந்தது. பார்த்தால் கடைசியில் இவனுடைய பெயர்.

 இவன் ஆள் தெரியாமல் பெயர் சொல்லாமல் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை இவ்விதமாய் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய அவன் பயன்படுத்தினான். அவன் இவ்விதமாய் business-ஐ கட்டி எழுப்பின போது, he has a business empire என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாள் அவனுடைய தொழில் சாம்ராஜ்யம் உடைந்து போயிற்று. அவன் திரும்பவும் கர்த்தரை நம்பி தனக்கு வருகிற லாபங்களை எல்லாம் ஆண்டவருக்கென்று அவன் செலவழித்தான். திரும்பவும் கர்த்தர் அவனைக் கட்டி எழுப்பினார்.

 இந்த உலகத்திலே உள்ள அத்தனை சாம்ராஜ்யங்களும், அத்தனை ராஜ்யங்களும் அசைக்கப்படும். எல்லாம் அசைவுள்ள ராஜ்யங்கள். ஏராளமாக சம்பாதிக்கிறான். பிள்ளைகளிடத்தில் போய் கேட்டால் சம்பாதித்தது எங்கு போனது என்பது தெரியாது. அவனுடைய சாம்ராஜ்யம் நிலை நிற்கவில்லை. வெள்ளைக்காரன் அவன் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பின பிறகு இங்கிலாந்து சொல்லுகிறது மூன்று நாடுகள் சேர்ந்த ஒரு சிறிய தீவென்று உங்களுக்குத் தெரியும்.

 England, Scotland, Ireland ஆகிய மூன்று சிறிய தீவுகள் சேர்ந்து Great Britan என்று பெயர் போட்டு அவனுடைய தேசிய கீதம் அலைகள் உம்முடைய நாட்டை முத்தம் செய்கிறது. நம்முடைய நாட்டிலே சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று அவன் பாடினான். பாடின நாட்களிலே Canada அவனுடைய நாடாய் இருந்தது. அமெரிக்கா அவனுடைய நாடாய் இருந்தது. இந்தியா அவனுடைய நாடாய் இருந்தது. கனடாவிலே சூரியன் அஸ்தமிக்கும் போது இந்தியாவிலே சூரியன் உதிக்கும். என்னுடைய சாம்ராஜ்யத்திலே எப்பொழுதும் சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்று பாடினான்.

 அவனுடைய ராஜ்யத்தை கர்த்தர் அசைத்துப் போட்டார். க்குகுகீ என்று சொல்லி லெனின் காலத்தில் ஸ்தாபித்து 1917-ம் வருடத்திலிருந்து 73 ஆண்டுகளாக நல்ல இரும்புத்திரை நாடாக ஒருவராலும் அசைக்க முடியாத நாடாக இருந்தது. இப்பொழுது ஒவ்வொரு நாடாக தங்கள் கையிலிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீதியுள்ளதை காப்பாற்றுவதற்காக தேசத்தின் தலைவர் சர்வ அதிகாரத்தை ணீச்ணூடூடிட்ஞுணt-ல் இருந்து வாங்கி எவ்விதத்திலாகிலும் இந்த நாடுகளை பிரிந்து போகாமல் சிதறிப்போகாமல் பண்ணுவேன் என்று சொல்லி அவன் வாக்கு பண்ணி இருக்கிறான். பிரயாசப்படுகிறான்.

 இந்தியாவிலே என்ன போராட்டம்? குமரி முதல் இமயம் வரை இருக்கிறது. ஓச்ண்டட்டிணூ சொல்கிறது என்னைப் பிரித்துவிடு நான் தனியாகப் போகிறேன். நாகாலாந்து சொல்கிறது என்னைப் பிரித்துவிடு நான் தனி ஆட்சி செய்கிறேன். பஞ்சாப் சொல்கிறது என்னைப் பிரித்து விடு நான் தனி நாடாகப் போகிறேன். தென் இந்திய நாடுகள் வாய்திறந்து சொன்னால் கொன்றுவிடுவார்கள் என்று சொல்லாமல் இருக்கிறார்கள்.

 ஏனென்றால் உலகத்திலே ஒரு ராஜ்யத்தையும் நிலையான ராஜ்யமாய் ஒருவராலும் கட்டிக் காக்கவே முடியாது. உலகத்திலே மிகப் பெரிய முதல் சாம்ராஜ்யம் அசிரிய சாம்ராஜ்யம். உலகம் முழுவதையும் ஆண்டார்கள். பெரிய பெரிய விக்கிரகங்களை வழிபட்டார்கள். அசிரிய சாம்ராஜ்யம் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய்விட்டது. எகிப்து மாபெரும் சாம்ராஜ்யமாக இருந்தது. அந்த தலைவன் வந்து கேட்டான். நான் உங்களுடைய தேவனுக்கு செவிகொடுப்பதற்கு யார்? அவரை நான் அறியேன்.

 எகிப்து சாம்ராஜ்யம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தானி. 7,2 ஆகிய இரண்டு அதிகாரங்களும், வெளி. 13-ம் அதிகாரம் அதற்குப் பின்னால் வருகிற சாம்ராஜ்யத்தைப் பற்றி வரிசையாகப் போடப்பட்டிருக்கிறது. ”அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்”(தானி. 7:3;17). அந்த நான்கு ராஜாக்களில் முதலாம் ராஜா 4-ம் வசனத்திலிருக்கிற சிங்கத்தைப் போல் இருந்தான். அவன் பாபிலோன் சாம்ராஜ்யம். 5-ம் வசனத்திலே இரண்டாம் மிருகம் கரடிக்கு ஒப்பாயிருந்தது. அது மேதிய பெர்சிய சாம்ராஜ்யம். ஒருபக்கமாய் சாய்ந்து நின்றது.

 இராமேஸ்வரத்தில் பார்த்த அகதிகள் சொன்னதைச் சொன்னார். காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிவரையிலும் வரிசையில் நின்று ஒரு நேரம் சாப்பாட்டை இந்த அகதி முகாமில் வாங்குகிறோம். நாங்கள் இரண்டு, மூன்று மாடி கட்டிடங்களைக் கட்டி எங்களுடைய வாழ்க்கை நிரந்தரமாக இருக்கும் என்று பொன்னையும், பணத்தையும் ஏராளமாய் சேர்த்து குவித்தோம். கடைசியாக ஆபத்து வந்தது. ஓடிவிடலாம் என்று ஓடிபெட்டியில் பொன்னை மாத்திரம் எடுத்துக் கொண்டு அவசியமான துணியை எடுத்துக் கொண்டோம்.

 இலங்கையில் உள்ள பட்டாளம் அந்தப் பக்கமாக வந்ததாம். அவன் சுட்டானாம். இரண்டு பேர் காயம் ஒரு ஆள் மரணம். தகப்பன் மரித்துப் போனார். தாயாருக்கு அன்றைக்கே புத்திசுயாதீனம் இல்லாமல் போய்விட்டது. சிலர் சி.பி.எம் விசுவாசிகள் இருந்தார்களாம். அவர்கள் சொன்னார்களாம், எங்களுடைய பொருட்களும் போய்விட்டது, ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் ஆண்டவர் போகவில்லை. நீ அசையக்கூடிய ராஜ்யத்தின் மேல் நம்பிக்கை வைத்து உன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டே இருக்கிறாய்.

 இந்த உலகம் அசைந்து மாறுகிற சாம்ராஜ்யம். அதே சமயத்திலே நம்முடைய எதிர்பார்ப்பு என்ன? அசைவில்லாத ராஜ்யத்தை பெறப்போகிறவர்களாகிய நீங்கள். நீங்கள் இப்பொழுதே அதற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆண்டவருக்காக ஜீவிக்கிற மனிதன் அவன் அசையாத ராஜ்யத்தை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அத்தனை மனிதரும் அசைந்து போகிற ராஜ்யத்தை நம்பி மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்குகிற மனிதர்களாக இருக்கிறார்கள். சதாம் உசேன் எத்தனை தைரியமாக இருக்கிறான். அத்தனை கார்டூன்களிலும் ஒரு பபுன் ஆக போட்டிருக்கிறார்கள்.

 அவனுக்கு 5 லட்சம் பட்டாளம் இருக்கிறது. ஏராளமான ஆயுதம் இருக்கிறது. ஆனால் அவன் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளோடும் அவன் எதிர்த்து நிற்கிறான். அவனுடைய மூடத்தனத்தினால் அவனும் அழிந்து இந்த உலகமும் அழியப்போகிறது. கர்த்தர் இந்த பூமியை அழகாய் அசைக்கிறார். ஒரு சின்ன அசைவு. சில நிமிடங்கள் ஒரு குலுக்கு குலுக்கி விடுகிறது. சில இடங்களில் ஒரு அசைப்பு அசைத்தால் பெரிய அணைக்கட்டே தகர்ந்து போயிற்று. நாம் யார்? அசைவில்லாத ஒரு ராஜ்யத்தை நம்பியிருக்கிறோம். அரசாங்கங்கள் எல்லாம் அசைந்து மாறிப்போகிறது. அழிந்து போகிறதை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறவனுக்கு ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும். உலக மனுஷன் இரட்சிக்கப்படாத மனுஷன் அவன் பெரியவனாய் இருக்கலாம்.

 பத்து பங்களா கட்டி பெரிய வாழ்வு வாழ்கிறவனாக இருக்கலாம். ஆனால் அவன் பிடித்திருக்கிறது அசையும். கர்த்தர் அசைப்பார். ஒன்றுமில்லாமல் போகும். யோவானாகிய நான் பார்த்தேன், நான் வானத்தை காணவில்லை, பூமியைக் காணவில்லை, சமுத்திரமும் இல்லாமல் போயிற்று. எல்லாம் அசைந்து மாறிப்போகிறது. வெளி. 21-ம் அதிகாரத்தில்  இதோ நான் பார்க்கிற போது தேவனுடைய நகரமாகிய புதிய எருசலேம் தன்னுடைய மனவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல் வானத்திலிருந்து இறங்கி வருகிறதைக் கண்டேன். அதனுடைய அழகு பளிங்கின் ஒளியாக இருந்தது.

 ஒவ்வொரு வாசலும் முத்தாக இருந்தது ஒரு பக்கத்தில் அசைந்து மாறுகிறது மறுபக்கத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிற நமக்கு ஆண்டவர் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற அந்த நாடு. நாம் எந்த தேசத்தின் பரஜையாக இருக்கிறோமோ அந்த தேசத்தில் மாத்திரம் நம்முடைய பெயர் கிருக்கிப் போடப்படாமல் பத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு ராஜ்யம் உண்டு.

 பயப்படாதே சிறுமந்தையே உன்னுடைய பிதா உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க சித்தமாயிருக்கிறார். நீ சிறுமந்தை தான். உலகத்தார் பார்வையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் தான். ஆனாலும் உனக்காக ஒரு ராஜ்யத்தைக் கொடுப்பதற்கு ஆண்டவர் பிரியமாய் இருக்கிறார். ”ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றான்”(தானி. 7:18).

அழிந்து போகிற உலகம் தான். ”நீர் பார்த்துக்கொண்ழருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்க ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக் கொண்டு போயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால் ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று”(தானி. 2:34).

 அழகான சிலை. ஐந்து ராஜ்யங்கள். பாபிலோன் தேசம், மேதிய, பெர்சிய தேசம், கிரேக்க தேசம், ரோம சாம்ராஜ்யம், புதிய ரோம சாம்ராஜ்யம் ஐந்து ராஜ்யங்களால் ஆக்கப்பட்ட மகா பெரிய சிலையை ஒரு மனுஷனுடைய கையினால் பெயர்க்கப்படாத ஒரு சின்ன கல் உருண்டு வந்து இரும்பும், களிமண்ணும் கலந்த பாதத்திலே மோதினது, சின்ன சின்ன தூசியாக போய்விட்டது. அந்த சின்ன கல் தான் ஆண்டவருடைய ராஜ்யம்.

 சகல சாம்ராஜ்யங்களும் தவிடுபொடியாகி பறந்து போகும். தேவனுடைய ராஜ்யம் இந்த பூமி முழுவதையும் நிரப்பும். நீங்கள் பெரிய பர்வதமான மகா சாம்ராஜ்யத்தின் அங்கமாயிருக்கிறீர்கள். மனுஷன் அந்த பொன்னான தலையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான். உலகத்தின் மாபெரும் சாம்ராஜ்யங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான். தேவனுடைய பிள்ளைகளுக்குத் தெரியும் நாம் நிலையான சாம்ராஜ்யத்தில் அங்கமாயிருக்கிறோம்.

 “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக்கடவோம்“(எபி. 12:28). கிருபையைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நான் நிற்பது கிருபை. எனக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது கிருபை. நான் சம்பாதிப்பது கிருபை. எனக்கு சுகம் கிடைத்தது கிருபை. சாட்சி சொல்லுகிறவன் கிருபையைப் பற்றிக் கொண்டிருக்கிறான். ஓலை வீடு ஓட்டு வீடானால் நான் எவ்வளவு பிரயாசப்பட்டேன். நான் ஓட்டு வீடாக்கினேன் என்று சொல்லாதீர்கள். கர்த்தர் எனக்குக் கிருபை தந்தார் என்று சொல்லுங்கள். ஓடு டெரஸ் ஆகிவிட்டால் கிருபையைப் பற்றிக் கொண்டிரு.

 இப்படிப்பட்ட அசைக்க முடியாத ராஜ்யத்தை நாம் அடையப் போகிறவர்களாய் இருக்கிறபடியினால் கர்த்தர் சந்தோஷப்படுகிற ஒரு ஊழியத்தை கர்த்தருக்காக செய்ய வேண்டும். சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக் கொடுப்பது கர்த்தருக்குப் பிரியமான ஒரு சேவை. இந்த சரீரம் எவ்வளவு பொல்லாத சரீரம். சரீரத்தைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கும் போது கர்த்தர் ஆச்சரியமான கிருபையைத் தருவார்.

 எனக்கு இந்த சரீரத்தில் ஆச்சரியமான பெலனைத் தருகிறார். இன்னமும் தந்து கொண்டிருக்கிறார். ஒரு ஆத்துமாவையாவது சரியாக கர்த்தரிடத்தில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நடத்தாவிட்டால் கர்த்தர் உங்களிடத்தில் கணக்குக் கேட்பார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சகாவிட்டால் தனித்திருக்கும் செத்ததானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். ஆண்டவருக்காக எந்த நிலமையிலும் போகத் தீர்மானிக்கிற நாளில் தான் நான் யார் என்பதை நான் மறக்கிற நாளில் மாத்திரம் தான் கர்த்தர் என்னைப் பயன்படுத்த முடியும்.

 அசைவில்லாத ராஜ்யத்திற்கு நீ என்ன கொண்டு போகப் போகிறாய்? அசைந்து போகிற ராஜ்யத்திற்காக காலமெல்லாம் செலவழித்துவிட்டு நீ சம்பாதித்ததும், சேர்த்ததும், குவித்ததும் எங்கு போகும்? ஆண்டவருக்கு ஒரு சேவை செய்கிறது மாத்திரம் அல்ல. அவர் அங்கிகரிக்கிற ஆராதனையை செய்ய வேண்டும். ஆண்டவரை ஆராதிப்பதைப் போல பாக்கியம் என்ன? அப்பா என்று சொல்லி அப்பாவின் பாதத்தை முத்தமிடுவதைப் பார்க்கிலும் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது? இது தான் உன் வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியம். அசைந்து மாறுகிற அழிந்து போகிற உலகத்திலே ஆண்டவர் நமக்கு என்ன தந்தார். அழியாத ராஜ்யத்தைத் தந்தார். பயப்படாதே  சிறுமந்தையே தேவன் உனக்கு ராஜ்யத்தைத் தருவதற்கு பிரியமுள்ளவராயிருக்கிறார்.

 ஆபிரகாம் தனித்தவனாயிருந்தான். அவனை கர்த்தர் அழைத்து வேறுபடுத்தி மகிமையான வெளிப்பாடோடு அவனை நடத்தினார். எபி.11:10-ல் அது அல்ல அதிலும் மேன்மையான பரம தேசத்தை அவர்கள் நாடினார்கள். தேவனால் கட்டப்பட்ட கைவேளையில்லாத பரம ராஜ்யத்திற்கு அவர்கள் ஆயத்தப்பட்டார்கள். தாங்கள் விட்டு வந்த தேசத்திற்கு திரும்பிப் போக நினைத்திருப்பார்களானால், சமயம் அவர்களுக்குக் கிடைத்திருக்குமே இன்னும் விசுவாசிகள் பழைய தேசத்திற்கு நேராக கால்நடை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

 பழைய பொய், பழைய கெட்ட வார்த்தை, பழைய மோசமான நடக்கை, பழைய ஏமாற்று வேலைகள், பழைய உலக நேசம், பழைய உலக வேஷம். கலாத்திய சபைக்கு பவுல் சொன்னானே, ஆவியில் ஆரம்பம் பண்ணின நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் மாம்சத்திற்குள் போய்விட்டீர்களே. உங்களை இப்படி ஆக்கினவன் யார்? அவன் தரிப்புண்டு போனால் நலமாயிருக்குமே. ஏன் அந்த வார்த்தையை பவுல் சொன்னார்? பவுலுக்குத் தெரியும், ஆண்டவருக்காக ஜீவிப்பது மேன்மை.

 கர்த்தரை விட்டு விலகிப் போவது எவ்வளவு தீமை என்று. உங்கள் வாழ்க்கை கர்த்தரை ஆராதிக்கிற வாழ்க்கையாக இருக்க வேண்டும். போகிற இடங்களில் எல்லாம் கர்த்தரை ஆராதியுங்கள். துதித்துக் கொண்டே வேலை செய்யுங்கள். வார்த்தை உங்கள் இருதயத்திலே பதிந்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை தியானம் பண்ணிணீர்களானால், உங்களுடைய வாழ்க்கையில் அது ஆசீர்வாதமாய் இருக்கும்.

 கார்மைக்கேல் அம்மையார் தங்கள் 16-வது வயதினிலே குடும்பத்தோடு கன்வென்ஷனுக்கு போனார்கள். அங்கு பிரசங்கம் எல்லாம் கேட்டுவிட்டு வரும் போது, பைப்பில் தண்ணீர் பிடிக்கப் போகும் போது, கர்த்தர் ஒரு வார்த்தை பேசினாராம். ஒருவன் கட்டினது நிலைத்தால் அந்த வார்த்தை கேட்டவுடனே ஆண்டவரே பேசினார் என்று அதற்குப் பிறகு அவருக்கு வேறு யோசனை வரவில்லை. எல்லாரும் hotel-ல் சாப்பிடப் போனார்கள். எல்லாருக்கும் முன்பாக பொறித்த இறைச்சி கொண்டு வந்து வைத்தார்கள். எல்லாரும் இறைச்சி கரிந்து போய் விட்டது என்று முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அம்மா சொன்னது, ஒருவன் கட்டினது நிலைக்குமானால். இவர்கள் சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.

அவர்கள் தான் இந்தியாவில் வந்து மிக உஷ்னமான இடம் என்ன என்று கேட்டுவிட்டு டோனாவூரில் போய் மிகப் பெரிய ஊழியத்தை செய்தார்கள். இன்றைக்கு வீடுகளில் போகும் போது. அசைவில்லாத ராஜ்யத்தை பெறுகிறது நான் என்ற தியானித்துக் கொண்டே போங்கள். ஆண்டவரே எனக்கு ஒரு ராஜ்யத்தை நீர் வைத்திருக்கிறீரே, இந்த ராஜ்யம் அசைவில்லா ராஜ்யமாமே. அசைந்து போகிறவைகளுக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும். புருஷன் நேசிக்கவில்லை நான் ஏன் அழுது கொண்டிருக்க வேண்டும். உத்தியோகம் எல்லாம் அசைந்து போகிறது தானே. எனக்கு ஆண்டவர் ஒரு பெரிய ராஜ்யத்தைத் தந்திருக்கிறார். நான் ஆண்டவருக்குப் பயந்து இருக்க வேண்டும். நெகேமியா வழக்கமாய் வாங்குகிற 100க்கு ஒன்று என்று சொல்லுகிற வட்டியை வாங்கவில்லை.

 யோபு தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிற மனுஷனாயிருந்தான். கொர்நேலியு தேவனுக்குப் பயப்படுகிற மனுஷனாயிருந்தான். யோசேப்பு தேவனுக்குப் பயப்படுகிற மனுஷனாயிருந்தான். தானியேல் தேவனுக்குப் பயப்படுகிற மனிதனாய் இருந்தான். வேதபுத்தகத்தில் இருக்கிற அத்தனை பரிசுத்தவான்களும் தேவனுக்குப் பயப்படுகிற மனிதர்களாய் இருந்தார்கள். உங்களுக்கு அசைக்க முடியாத ராஜ்யத்தை ஆண்டவர் ஆயத்தப்பண்ணி வைத்திருக்கிறார்.

 தேசத்தில் யுத்தங்கள் நடக்கலாம். நீங்கள் நம்பியிருக்கிற ராஜ்யம் அசைக்கப்படுவதில்லை. ஏற்ற காலத்திலே அந்த ராஜ்யம் உங்களுக்காக பரலோகத்தை விட்டு ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு மனவாட்டியைப் போல் இறங்கி வரப்போகிறது. அதை ஆண்டவருடைய கையிலிருந்து பறித்துக் கொள்வதற்கு ஒரு மனுஷனுக்கும் முடியவே முடியாது.

 மல். 3:16-ல்  தேவனுக்குப் பயப்படுகிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் கொழுத்தக் கன்றுகளைப் போல் புறப்பட்டுப் போய் வளருவீர்கள். அசைவில்லாத ராஜ்யத்தை பெறுகிறது மாத்திரம் அல்ல. இந்த உலகத்தில் நீ ஆச்சரியமான வாழ்க்கை வாழப்போகிறாய். உன் வாழ்க்கையைப் பார்த்து அநேகர் ஆச்சரியப்படுவார்கள். இவனுக்கு என்ன சமாதானம், இவனுக்கு எவ்வளவு சந்தோஷம். Readers Digest-ல் நீங்கள் இனிமேல் உங்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை கொடுக்கும் போது, மூன்று வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். Balanced Food, Excercise and doing good. மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

  Doctors சொன்னது. மன்னிக்கிற சுபாவம் உள்ளவர்களுக்கு அநேக வியாதிகளிலிருந்து விடுதலையாகலாம் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். கசப்பு இருதயத்தில் இல்லாமல் இருந்தால். வாழ்க்கை வளமாக இருக்கும். மற்றவன் தாழ வேண்டும். நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு ஆயுள் நாள் குறையும். கர்த்தருக்குப் பயப்படாமல் துணிகரமான ஒரு காரியம் செய்து நான் ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ளுகிற போது. நான் சாதித்த காரியம் எந்த ராஜ்யம்? அசைகிற ராஜ்யம்.

 இந்த உலகத்தில் எதையும் பற்றிப் பிடிக்காதே. ஒன்றையும் பெரிதாக நினைத்துவிடாதே. எல்லாம் அசையும். அசைந்து மாறுகிறது. இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அசையாத ராஜ்யம் ஆண்டவர் நமக்காக வைத்திருக்கிறார். ஜெபிப்போம்.

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!