உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | Promise 2024 | Tamil Christian Song Lyrics | Jesus Calls

Uyara Parandhiduvaai
Jesus Calls Promise for 2024
Tamil Christian Song Lyrics

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்-2 பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே-2

நீ மேலே எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்-2 நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்-2 1.உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்-2 உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும்-2-நீ மேலே 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்-2 துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான்-2-நீ மேலே

Kartharin manamagizhchi unnai soozhndhidum Bhoomiyin uyarvidangal unnai varaverkum Paraloga sudhandharathal poshippaare Vaanathin palaganiyai thirandhiduvaare Nee mele ezhumbiduvaai Miga uyarathil parandhiduvaai Nee kaathirundha naatkaluku palanai anubavippai Nee ilandhadhai rettipaaga sudhandharithiduvaai Nee ilandhadhai rettipaaga sudhandharithiduvaai 1. Unnai odukum kattugal ellam indrodu avizhndhidum Munnera thadayaai nirkum sangiligal arundhidum Unnakuriya dharisanam niraivera thuvangidum Anugula vaasalgal unakaaga thirandhidum 2. Needhiyin suriyan unmeedhu udhithiduvaar Yesu tham settaiyin keel aarokyam thandhiduvaar Dhunmaarkan un kaalin saambalaai maariduvaan Minnalai polave sathuru vizhundhiduvaan

1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم

Join with us!