Lyrics, Melody & Sung By Eva.Albert Solomon
Um Anbai Marappeno | உம் அன்பை மறப்பேனோ | Eva. Albert Solomon
Tamil Christian Song Lyrics
என்னை அழைத்தவரே
கருவில் பிரித்தெடுத்தீர்
உம் அன்பை மறப்பேனோ
ஜீவனுள்ள நாளெல்லாம் உம் கிருபையை பாடியே
உமக்காக என்றும் ஜீவிப்பேன்
1. இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன்
பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர்
உம் சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன்
உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன்
இயேசுவின் இரத்தம் என் பாவத்தை கழுவ
கல்வாரி அன்பென்னை நிரப்பினதே... (2) - என்னை
2. வாலிப நாட்களில் முன் குறித்தீரே
விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர்
ஆத்தும பாரம் இதயத்தை உடைக்க
அழைப்பின் நோக்கத்தை புரிய வைத்தீர்
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீர்
காருன்யத்தால் என்னை இழுத்துக்கொண்டீர்... (2) - என்னை
3. பயனுள்ள பாத்திரமாய் மாற்றிட என்னை
உடைத்து உமக்காக உருவாக்கினீர்
கண்ணீரின் பாதையில் உம் பெலத்தால் இடைக்கட்டி
மகிழ்வுடன் உம்மை துதிக்க செய்தீர்...
தேவரீர் என்னை இதுவரைக்கும்
கொண்டுவர நான் எம்மாத்திரம்...(2) - என்னை
Ennai azhaithavare Karuvil piritheduthir Um anbai nan marappeno! Jivanulla nalellam um kirubaiyai padiye Umakkaka enrum jivippen..
1. Ratchippai ariyamal paavathil vaazhndhen Parisutha thevan ennai thedi vanthir Um sithathai ariyaamal suyathinil mithanten Um anbin kural kettu tatham seythen Yesuvin ratham en pavathai kazhuva Kalvaari anbennai nirappinathe.. 2. Valiba natkalil munkurithire Viduthalai thanthennai abishegithir.. Athuma baram idhayathai udaika Azhaippin nokathai puriya vaithir Aanaathi snekathaal ennai nesithir Kaaruṇyathaal ennai izhuthu kondir... 3. Payanulla pathiramaai maatrida ennai Udaithu umakkaga uruvakkinir.... Kannirin paathayil um belathaal idaikkatti Makizhvudan ummai tudhikka seythir... Dhevarir ennai ithuvaraikkum Konduvara nan emmathiram