Nirainthu Nirainthu Song Lyrics :: Sung by : Fr.S.J.Berchmans
byNethanathaneal•
0
Tamil Christian Song Lyrics
Lyrics, Tune, Sung By : Fr. S.J. Berchmans
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
அப்போஸ்தலர் 6:7 அன்று ஏழுபேர் ஆவியால் நிரம்பியிருந்ததால் தேவவசனம் தொடர்ந்து பரவியது, சீடர்கள் தொகையும் மிகவும் பெருகியது, அநேக மதகுருக்கள் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
1.எங்கும் வசனம் பரவியது
ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால்-2
சீடர்கள் தொகையும் பெருகியது
கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான் வல்லமையால் நிறைந்ததால் பெரிதான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அதேபோல் பர்னபா நிரம்பியதால் அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 11:26
2.ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால் நிரம்பினதால்-2
திரளான மக்கள் திரும்பினார்கள்
பர்னபா ஆவியால் நிரம்பியதால்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
அன்று பவுல் பரிசுத்தாவியால் நிரம்பியதால் பார்வையடைந்தார். பெலனடைந்து தாமதமின்றி பிரசங்கம் செய்தார். அப்போஸ்தலர் 9:17
3.பார்வை அடைந்தார் பவுல் அன்று
பரிசுத்த ஆவியால் நிரம்பியதால்-2
போஜனம் செய்து பெலன் அடைந்தார்
தாமதமின்றி பிரசங்கம் செய்தார்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
பேதுரு பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் அதிகாரிகள் முன் இயேசுவாலன்றி வேறு ஒருவராலும் பாவமன்னிப்பாகிய இரட்சப்பு இல்லைஎன்று முழக்கமிட்டார். அப்போஸ்தலர் 4:8
4.இயேசுவால் அன்றி எவராலும்
பாவமன்னிப்பு இல்லவே இல்லை-2
துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன்
தைரியமாக அறிக்கை செய்தார்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
Nirainthu nirainthu Nirappiduvaen
Petra ooliyam niraivetruvaen
Aaviyinaal vaarthaiyinaal
Anuthinamum nirambiduvaen
1. Engum vasanam paraviyathu
Ezhu per aaviyal nirambiyathal
Seedarkal thokaium perugiyathu
Keezhpadinthaargal mathakurukkal
2. Sthevaan seithaan athisayangal
Deva aaviyaal nirambinathaal
Thiralaana makkal thirumbinaargal
Barnaba aaviyaal nirambiyathal
3. Paarvai adainthaar Paul sndru
Parisutha saviyaal nirambiyathaal
Bojanam seithu belan adainthaar
Thaamathamindri pirasangam seithaar
4. Yesuvaalandri evaraalum
Paava mannipu illave illai
Thunivudan Pedhuru thalaivargal mum