SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE | BEN SAMUEL | Tamil Christian Songs

சீக்கிரம் வரப்போகும் ராஜாதி ராஜாவே
உம் வருகைக்காக காத்திருக்கிறேன் x(2)

உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
உம் முகத்தைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்

மாராநாதா சீக்கிரம் வாரும்x(4)

1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
(நல்) இதயத்தை தந்திடுமே-2

மாராநாதா சீக்கிரம் வாரும்-4

2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2

மாராநாதா சீக்கிரம் வாரும்(4)

3. நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2

அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

வருக இராஜ்ஜியம் வருக(4)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக(2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!