பரலோகத்தின் தேவனே
என் ஜெபத்தை கேளுமே
உடைந்துபோன என் வாழ்க்கையை
நீர் நோக்கி பாருமே
பகைவனின் சூழ்ச்சியோ
நான் செய்த தவறுகளோ
என் பலிபீடங்கள் சிதறிபோனதே
உம் மகிமையை நான் இழந்துவிட்டேனே
Chorus
என்னை கட்டுமே x3
கட்டி எழுப்புமே
உடைந்துபோன என் வாழ்க்கையை
திரும்ப கட்டுமே
இழந்துபோன உம் மகிமையை
மீண்டும் தாருமே
Verse 2
வறட்சியான நிலங்களில்
உம் மாரியை பொழியுமே
பலனேயில்லாத இடங்களும்
கனிதர வேண்டுமே
பாவத்தின் கட்டுகள் உடைத்து
உம் அன்பால் எங்களை அணைத்து
உம் ஆவியின் பெலத்தால்
மீண்டும் எழும்பவே
என்னை கட்டுமே
உம் ராஜ்ஜியம் கட்டவே
Bridge
பலிபீடங்கள் கட்டுமே - என்னை
ஜீவபலியாக தருகிறேன்
ஆவியின் வரத்தால் நிரப்புமே
உம் நாமம் இன்னும் உயர்த்தவே
மறுரூபமாக்குமே
என்னை சாட்சியாய் நிறுத்துமே