Song : Rajadhi Rajavam :: Lyrics, Tune, Composed by - Pr Jeswin Samuel :: Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas


Jeswin Samuel Ministries Presents
Song - Rajadhi Rajavam
Lyrics, Tune, Composed by - Pr Jeswin Samuel
Co- Written and featured by - Pr Alwin Thomas
Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas
Tamil Christian Worship Song Lyrics

Rajathi Rajaavaam Karthaathi Kartharaam
En Nesar Ennodundu
Saththiya Vaar
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால்
விசுவாசம் என்னில் உண்டு-2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி

கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே
தூக்கி எடுத்தீரைய்யா
உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை
தாங்கி கொண்டீரய்யா

தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை
மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர்-2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி

சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில்
கிருபையால் காத்தீரைய்யா
சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார
உயர்த்தி வைத்தீரைய்யா

நானே உன் தேவனாய் இருப்பேனென்று
வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்-2

உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-3
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!