Song : Thuthippaen :: Artist : Rev. Vijay Aaron Elangovan :: Tamil Christian Worship Song Lyrics

Song : Thuthippaen
Artist : Rev. Vijay Aaron Elangovan
Tamil Christian Worship Song Lyrics

துதிப்பேன் துதிப்பேன்
என் வாழ்நாள் முழுவதும்
என்னை காத்திட்ட நல் மேய்ப்பர்
நீர் ஒருவரே
புகழ்வேன் புகழ்வேன்
என் காலம் முழுவதும்
என்னை தாங்கிட்ட கைகள் உம்
கைகள் அன்றோ

வானம் மாறிப்போகும்
பூமி மாறிப்போகும்
உம் வார்த்தைகள்
என்றென்றும் மாறாதது-2

நீர் நல்ல தேவன்
அற்புதங்கள் செய்யும் தேவன்
சர்வ வல்லவர் சர்வ வல்லவர்
என் நிழலாய் என்றும்
இருப்பவர் நீரே-2

அறிவதும் என் வாழ்வின் எல்லா
திசைகள் பற்றி அறிவதும்
புரிவதும் என் மனதின் பாரம்
எல்லாம் சரியாய் புரிவதும்

நீர் அல்லால் வேறொருவர்
இங்கே இல்லை
மனக்காயம் மாற்ற வைத்தவர்
எவரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன்-2

நிரப்பினீர் உம் அன்பினால்
என் உள்ளம் எல்லாம் நிரப்பினீர்
கழுவினீர் உம் இரத்தத்தால் 
என் பாவம் எல்லாம் கழுவினீர்

நீர் அல்லால் வேறொருவர்
எவரும் இல்லை
என் பாவ கறைகள் போக்க
யாரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன்-2-துதிப்பேன் துதிப்பேன்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!