Alleluya Paduven ::| New Tamil Christian Song Lyrics :: Written & Sung by : Bro.John Wesley

அல்லேலூயா பாடுவேன் | Alleluya Paduven | New Tamil Christian Song 2019 Written & Sung by : Bro.John Wesley Composed by : A. Jeron Edited by : B.Edwin Prabhakar Alpha & Peniel Praising Church, Tuticorin Lyrics: அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன் புதுப்பாட்டை என்றும் பாடுவேன் அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் என்றும் பாடுவேன் எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன் நீர் செய்த நன்மைகளை வாலாக்காமல் என்னையும் தலையாக்கினீர் கீழாக்காமல் என்னையும் மேலாக்கினீர் அதிசயர் நீரே அற்புதர் நீரே அகிலத்தையும் படைத்தவர் நீரே ஜனங்களுக்குள்ளே பெரிய ஜாதியாக்கினீர் அதிசயங்களை காண செய்தீர் உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே சகலத்தையும் படைத்தவர் நீரே தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே உமக்காக என்னையும் பிரித்தெடுத்தவரே நல்லவர் நீரே வல்லவர் நீரே அடைக்கலமாய் வந்தவர் நீரே என்னை விட்டு விலக மாட்டேன் என்றீர் கைவிடவும் மாட்டேன் என்றீர் மறைவிடம் நீரே உறைவிடம் நீரே கேடகமாய் வந்தவர் நீரே

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!