Nalla Thagappan Neerthanaya - நல்ல தகப்பன் நீர் தான் ஐயா - Pr.Lucasekar | Tamil christian songs
byNethanathaneal•
0
நல்ல தகப்பன் நீர் தான் ஐயா
நல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயா
உம்மையன்றி எனக்கு யாரும் இல்ல
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
நான் போகும் பயணம் தூரம் தூரம்
என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா
நான் மயங்கி விழும் நேரத்துல
உங்க கோலும் தடியும் தேற்றுத்தப்பா
பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயா
பரலோகம் நான் சென்றாலும் நீர் தான் ஐயா
துவக்கமும் முடிவும் நீர் தான் ஐயா (என்)
கண்ணின் மணி போல் காத்திடுவீர் (என்னை)
என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை
என் வாழ்நாள் முழுவதும் அது போதுமே
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம்