Tamil Christian Song Lyrics
Lyrics By : Father. S.J. Berchmans
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
கடல் மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
செங்கடல் உம்மைக் கண்டு
ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றதையா
மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
மலைகள் செம்மறி போல்
துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல்
குதித்ததும் ஏன் ஐயா
வனாந்தர பாதையிலே
ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை
நீரூற்றாய் மாற்றினீரே