Album : Aaviyodu Aaraadhikka
Bro. J. Sam Jebadurai
ஆவியோடு ஆராதிக்க
சுத்தம் தாரும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்
அனலாய் உம்மை ஆராதிக்க
ஆதி அன்பில் நிலைத்திருக்க
அக்கினி அபிஷேகம் தந்திடுமே
சுட்டெரிக்கும் தூய ஆவியினால்
தூய்மைப்படுத்தி துலங்கச் செய்யும்
ஏங்கும் உள்ளம் மகிழ்ந்திடவே
கல்வாரி நதியால் சுத்திகரியும்
கழுவிடுமே எமை கழுவிடுமே
பரிசுத்தமுள்ள பாத்திரமாய்
ஊழிய எல்லை விரிவடைய
உத்தமனே நீர் உதவி செய்யும்
கறைதிரையற்ற மணவாட்டியாய்
மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ளும்