ஆராதனை துதி ஆராதனை
ஆராதனைக்கு உரியவரே
ஆராதனை துதி ஆராதனை
ஆராதனைக்கு பாத்திரரே...(2)
இயேசு நாமம் சொன்னால்
பேய்கள் விலகி ஓடுதே
இயேசுவின் இரத்தத்தினால்
வியாதிகள் அழிந்துபோகுதே..(2)
1.சூனியக் கட்டுகள் மந்திரக் கட்டுகள்
இயேசுவின் நாமத்தாலே விலகுதே
கொள்ளை நோய்கள் தீராத வியாதிகள்
இயேசுவின் இரத்தத்தாலே மறையுதே...(2) (இயேசு நாமம்)
2.ஒவ்வொரு நாளும் ஸ்தோத்திரம் சொல்ல
கிருபை மேல் கிருபை பெருகுதே
அனுதின வாழ்வில் இந்த கிருபை
அளவில்லாமல் நடத்துதே....(2) ( இயேசு நாமம்)
3.துதியும் கனமும் உமக்கே செலுத்த
என்னை தெரிந்துகொண்டீரே
ஜெபிக்கும் போது துதிக்கும் போது
பிரசன்னமே நிரப்புதே...(2) ( இயேசு நாமம்)