சிலுவையில் நிழலில் - Siluvaiyin Nilalil Anuthinam Song Lyrics :: Tamil Christian Old Song Lyrics

Tamil Calvary Song Lyrics
Sung By:  Sis Hema John
Keerthanaigal Song Lyrics

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1.பாவப் பாரச்சுமையதால் சோர்ந்தே தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் 2.எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் இயேசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக் கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் 3.இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!