Meendum Varuven Naan - மீண்டும்‌ வருவேன்‌ நான்‌ :: TPM TAMIL SONG NO 538 LYRICS

The Pentecostal Mission (TPM)
Tpm Tamil Songs Lyrics

TPM Tamil Song 538

HE WILL COME WITH A SHOUT

English Tamil
1. Meendum Varuvaen Naan Endru Vaakkuraiththavaa
Eppo Varuveer Neer Eppo Varuveer
Magimaiyil Yesuvai Neer Velippadum Naaladhil
Magilvudan Um Vadhanam Tharisppaenae


Meetparin Mugam Kaanuvaen - Andru
Jeyaththin Geetham Paaduvaen
Allalgal Neengi Naan Anbar Yesuvudan
Aaluvaen Nithya Nithyamaai

1. மீண்டும்‌ வருவேன்‌ நான்‌ என்று வாக்குரைத்தவா
எப்போ வருவீர்‌ நீர்‌ எப்போ வருவீர்‌
மகிமையில்‌ இயேசுவே நீர்‌ வெளிப்படும்‌ நாளதில்‌
மகிழ்வுடன்‌ உம்‌ வதனம்‌ தரிசிப்பேனே

மீட்பரின்‌ முகம்‌ காணுவேன்‌ - அன்று
ஜெயத்தின்‌ கீதம்‌ பாடுவேன்‌
அல்லல்கள்‌ நீங்கி நான்‌ அன்பர்‌ இயேசுவுடன்‌
ஆளுவேன்‌ நித்ய நித்யமாய்‌

2. ஆரவாரத்தோடு கர்த்தர்‌ தாமே வானத்தில்‌
காத்திடும்‌ ஜெயாளிகட்காய்‌ வருவீர்‌
ஆவியால்‌ பாவம்‌ லோகம்‌ சாத்தானை ஜெயித்து
ஆவலாய்‌ காத்திட உம்‌ பெலன்‌ ஈயுமே — மீட்பரின்‌

 3. பிரதான தூதனின்‌ சத்தத்தோடு வான்மீதில்‌
பூரணரைச்‌ சேர்க்க வந்திடும்‌ வேளை
மகிமையின்‌ சுவிசேஷத்தால்‌ உந்தன்‌ சாயலாய்‌
மாறியே உம்மைச்‌ சேர அருள்‌ புரியும் ‌ — மீட்பரின்‌

 4. தேவ எக்காளத்தின்‌ தொனியோடு வானத்தில்‌
சுத்தரைச்‌ சேர்க்க நீர்‌ வரும்‌ நேரத்தில்‌
திருவசனத்தினாலும்‌ ஆவியினாலுமே
மறுரூபம்‌ அடைந்திட காத்திருப்பேன்‌ — மீட்பரின்‌ 

5. சீயோன்‌ மணாளா நியமித்தீர்‌ உம்‌ சிந்தையில்‌
நித்திய விவாகத்திற்கென்றென்னையும்‌
நித்திய மணவாட்டியாய்‌ உம்மோடிசைந்து
நித்திய காலமாக சுகித்திருப்பேன்‌ — மீட்பரின்‌

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!