Album : Nanbanae :: Sung By : Jeyasekar Lyrics, Tune : Jeyasekar :: Music : Giftson Durai :: Tamil Christian Latest Song

 

Album : Nanbanae
Sung By : Jeyasekar
Lyrics, Tune : Jeyasekar
Music : Giftson Durai
Tamil Christian Latest Song

 கடைசி காலம் நெருங்கிற்றே
கர்த்தரின் வருகை சமீபமே
கொடிய நாட்கள் கண்முன்னே
கொலை வெறிகளும் நித்தமுமே-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

கள்ள போதகமும் கரடு முரடும்
காலூன்றி விட்ட இக்காலத்திலே
கொள்ளை லாபங்களும் கொடூர செயலும்
கோலோச்சும் உலகிலே-2

 நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டது
வாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டது
லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது
நாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்
சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளை
எரி நரகம் கொண்டு சேர்க்கும்
ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால்-2

நண்பனே நண்பனே உன் நிலை
யாதென உணர்வடையாயோ-2

nanbane song lyrics in tamil, giftson durai songs lyrics, 

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!