Song: Kolgodavai Nokkum podhu
Lyrics & Tune : Dr.V.C.Amuthan
Singer & Artist : Sis. Kirubavathi Daniel
கல்வாரி பாடல் Elim Tv
Tamil Christian Calvary Song
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது
யாருக்காய் இந்த பாடுகள்
யாருக்காய் இந்த காயங்கள்
என் பாவம் போக்க மரித்தீர்
என் சாபம் நீக்க மரித்தீர்
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது
கெத்சமனே பூங்கா சென்றீரே
ரத்த வேர்வை சிந்தி நின்றீரே x (2)
சித்தம் தேவா சித்தம் தியாகம் அல்லவோ
முத்தம் முத்தம் யூதாஸ் முத்தம்
துரோகம் அல்லவோ
கண்ணில் ஈரமாகுதே நெஞ்சில் சோகமாகுதே
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது
சாரோன் ரோஜா மீது முட்களோ
முள்முடியில் யூத ராஜனோ x (2)
ஜீவ ஊற்றிக்கின்று தாகம் வந்ததோ
காளான் தோய்ந்த காடி சோகம் தந்ததோ
ஆத்ம தாகம் அல்லவோ
மீட்க்கும் நேசம் அல்லவோ
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது
ஒப்புவிக்கும் அன்பை பார்க்கிறேன்
ஒப்பற்ற உம் நேசம் பார்க்கிறேன் x (2)
ரத்தத்தாலே என்னை மீட்டுக்கொண்டீரே
கிருபையாலே என்னை ஏற்றுக்கொண்டீரே
தாழ்த்தி ஒப்படைக்கிறேன்
என்னை அர்ப்பணிக்கிறேன்
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது
யாருக்காய் இந்த பாடுகள்
யாருக்காய் இந்த காயங்கள்
கொல்கொதாவை நோக்கும்போது
சோகம் முட்டுது
கல்வாரியை என்னும்போது
கண்ணீர் கொட்டுது