Sennira Kayiru Pola :: Sung By: Sis Hema John :: Lyricist : Bro. J. Sam Jebadurai :: Tamil Calvary Song Lyrics

Tamil Calvary Song Lyrics
Calvary Song
Sung By:  Sis Hema John
Lyricist : Bro. J. Sam Jebadurai

செந்நிற கயிறு போல
ஊற்றும் 
செந்நிற குருதி – 2
கொல்கொதா மேட்டிலில் வழியுதே
எந்தனின் பாவ சாபங்கள் போக்கும்
தூயரின் இரத்தம் வழியுதே
ஊற்றும் அன்பு சிந்தும் அன்பு
நிரம்பி வழியும் அன்பு - 2

1.சிலுவை சுமந்த தோள்களிலே 
சுமந்தீர் என்னையுமே – 2
இனியும் சுமப்பீர் இறுதிவரை 
நீரே என் தஞ்சம் - 2

2.அழகும் இல்லை சௌந்தரியம் இல்லை 
அந்த கேடடைந்தீர் – 2
தேவ சாயலை தந்திடவே 
நீரே என் ராஜா - 2

3.அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு
தழும்புகள் ஏற்றுக்கொண்டீர்
ஆரோக்கிய வாழ்வை தந்திடவே 
நீரே பரிகாரி

4.எந்தன் பாவ சாபங்கள் முறிக்க
ஏற்றீர் முள் முடியை
ஆசீர்வாதத்தை தந்திடவே
நீரே என் தந்தை

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!