Karthane Em Thunaiyaneer :: கர்த்தனே எம் துணையானீர் :: lyricist : Dr. Emil Jebasingh

Karthane Em Thunaiyaneer
Sung By: Ft. Cathrine Ebenesar
lyricist : Dr. Emil Jebasingh
Tamil Christian Song Lyrics

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே

 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
 ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!